மாந்தை கிராமத்தில் பேருந்து கவிழ்ந்து 25-க்கு மேற்பட்டோர் காயம்

பெங்களூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு சென்ற தனியார் பேருந்து மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மாந்தை நாட்டாறு சட்ரஸ் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்துஆற்றின் கரையோரம் இருந்த மின் கம்பம் மற்றும் டூவீலர்கள் மீது மோதிய நிலையில் பஸ் ரோட்டில் கவிழ்ந்தது. தொடர்ந்து பஸ்ஸில் பயணித்த 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் .அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மயிலாடுதுறை , கும்பகோணம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த 5 பேர் பலத்த காயமடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . இதில் இருவர் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்ப
தகவல் அறிந்த பாலையூர் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டதுடன் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி சென்ற தனியார் பேருந்து கண்டக்டரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Exit mobile version