தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு ICE பிளாண்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் அடையாள உண்ணாவிரதம்

தரங்கம்பாடி அருகே புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஐஸ் பிளாண்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கிராம மக்கள் 200 ற்கும் மேற்பட்டோர் அடையாள உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிரந்தரமாக ஐஸ் பிளாண்ட் தடை செய்யப்படவில்லை என்றால் போராட்டம் தொடரும் என அறிவித்தனர் :-

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கேசவன் பாளையம் பேருந்து நிறுத்தம் எதிரே புதிதாக ஐஸ் பிளாண்ட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கேசவன்பாளையம், சமயன்தெரு, அரிசிக்காரப்பாளையம், ஆரன்பாளையம், சாத்தங்குடி மேலத்தெரு மற்றும் மகளிர் கலைக்கல்லூரி, மழலையர் பள்ளி, அரசு மாணவியர் விடுதி, ஊனமுற்றோர் காப்பகம் இவைகளுக்கு மத்தியில் தேசிய நெடுஞ்சாலையில் இந்த ஐஸ் பிளாண்ட் அமைவதால் ஐஸ் பிளாண்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து இக்கிராமங்களைச் சார்ந்த 200 ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதியில் ஐஸ் பிளாண்ட் அமைக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பதோடு நிலத்தடி நீர் முற்றிலுமாக பாதிக்கப்படும் என இப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும் பொது மக்களிடம் கருத்து கேட்காமல் இந்த ஐஸ் பிளாண்ட் அமைவதற்கு அனுமதி வழங்கிய மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். உடனடியாக குடியிருப்பு மத்தியில் அமைக்கப்பட்டு வரும் ஐஸ் பிளாண்ட்டை உடனடியாக தடை செய்ய வேண்டும் இல்லாவிடில் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்

Exit mobile version