ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை மூலம் விழுப்புரம் மற்றும் வானூர் சட்டமன்ற தொகுதியில் இரண்டு லட்சத்திற்கும் மேலான உறுப்பினர்களை சேர்த்துள்ளதாக விழுப்புரத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளரும்,விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான லட்சுமணன் பெருமிதம்
விழுப்புரம் நகரப்பகுதியில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் விழுப்புரம் சட்டமன்ற தொகுதி மற்றும் வானூர் சட்டமன்றத் தொகுதி ஒன்றிய, நகர ,பேரூர் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளரும் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர்ருமான டாக்டர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்றது அப்போது பேசிய சட்ட மன்ற உறுப்பினர் லட்சுமணன் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி ஓரணியில் தமிழ்நாடு என்கிற உறுப்பினர் சேர்க்கையில் விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியில் ஒரு லட்சத்து 17,763 உறுப்பினர்களை சேர்த்துள்ளதாகவும், வானூர் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 4,345 உறுப்பினர்களை சேர்த்துள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த 13 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவிக்கும் போது தமிழக அளவில் 2 கோடியே 80 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாகவும் ஒரு கோடி பேர்களின் குடும்பங்கள் இந்த உறுப்பினர் சேர்க்கை மூலம் கழகத்தில் இணைந்துள்ளதாகவும் தெரிவித்ததாக கூறினார்
