பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காவிரிப்புபட்டிணம் ஊராட்சியில் இருந்து திமுக பாமக தேமுதிக விசிக கட்சியினர் 150 க்கு மேற்பட்டோர் விலகி மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ் பவுன்ராஜ் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர் :-
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி உட்பட்ட சீர்காழி கிழக்கு ஒன்றியம் காவிரிப்புபட்டினம் ஊராட்சியில் தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி பாமக கிளை செயலாளர் சிலம்பரசன் திமுக ஊராட்சி பிரதிநிதி ராஜேந்திரன் சிவக்குமார் சோமசுந்தரம் ஏற்பாட்டின் பேரில் சீர்காழி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஏ கே எஸ் சந்திரசேகர், முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ் பவுன்ராஜ், தலைமையில் நடைபெற்றது சீர்காழி கிழக்கு ஒன்றியம் காவிரிப்புபட்டினம் ஊராட்சியில் இருந்து திமுக பாமக தேமுதிக விசிக சேர்ந்த 150க்கு மேற்பட்டோர் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு மாவட்ட கழக செயலாளர் எஸ் பவுன்ராஜ், கழக சால்வை போர்த்தி வரவேற்று மற்றும் புடவை வேஷ்டி வழங்கினார் நிகழ்ச்சியில் சீர்காழி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பி வி. பாரதி, மா சக்தி, பூராசாமி, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் வழக்கறிஞர் பாலாஜி, உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
















