புளியந்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் அருண் இவர் அதே பகுதியில் அலுமினிய சம்பந்தப்பட்ட தொழில் செய்து வருகிறார் இவர் மின்டு பகுதியில் இதே தொழிலை செய்து வரும் தொழில் ரீதியான நண்பர் மதன் மூலம் அரவிந்த் அறிமுகம் ஆகிறார் அரவிந்த் மற்றும் சதீஷ் இருவரும் நண்பர்கள் இதில் சதீஷ் என்பவர் முன்னாள் அதிமுக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் என்று கூறி அறிமுகம் ஆகிய உள்ளனர். அப்பொழுது சதீஷ் என்பவர் தன்னிடம் பிசினஸ் ஒன்று உள்ளது என்று கூறியுள்ளார் பணம் கொடுத்தால் இரண்டு மணி நேரத்தில் இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார் ஆனால் இத்தொழிலில் முதலீடு செய்ய எனக்கு விருப்பமில்லை எனக் கூறிய அருண் மறுப்பு தெரிவித்துள்ளார் பலமுறை தொடர்பு கொண்டு மூளைச்சலவு செய்து அவரிடம் இருந்து ரூபாய் ஒரு கோடியை 15 லட்சம் ரூபாய் பெற்றுள்ளனர் மேலும் இந்த பணத்திற்கு இரண்டு மணி நேரத்தில் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் தருவதாக கூறியுள்ளனர் ஆனால் 24 மணி நேரம் ஆகியும் பணம் திருப்பி தராத நிலையில் தான் ஏமாற்றப்பட்டிருக்கிறேன் என்பது உணர்ந்த அருண் இது குறித்து சம்பந்தப்பட்ட சதீஷ் அரவிந்த் மற்றும் அவருடைய கூட்டாளர்களிடம் பேச்சாற்றை ஈடுபட்டார் ஆனால் அவர்கள் நாளை மதியம் பணம் தந்து விடுகிறேன் என்று கூறியுள்ளார் இந்நிலையில் அருண் தன்னுடைய பணம் மற்றும் சக நண்பர்கள் தெரிந்தவர்கள் என பல பேரிடமிருந்து பணம் பெற்று இந்த ஒரு கொடிய 15 லட்சம் ரூபாயில் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது இதனால் சுமார் ஒரு மாதங்கள் ஆகியும் இதுவரை பணத்தை திருப்பித் தராததால் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆணையர் அலுவலக காவல்துறையினர் இதுவரை இது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தான் பிறரிடம் வாங்கிய கடனை திருப்பித் தர முடியாமல் மிகுந்த மன உளைச்சலில் ஆளாகியுள்ளதாக அருண் தெரிவித்தார் மேலும் முன்னாள் அதிமுக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் என்று கூறி பல பேரிடம் மோசடியில் ஈடுபட்டு வரும் சதீஷ், அரவிந்த் மற்றும் அவர்களின் கூட்டாளிகளின் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்க வைத்தார்
இதுகுறித்து காவல்துறையிடம் கேட்டதற்கு அருண் வழக்கு பதிவு போவதாக கூறியதாகவும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதும் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறினர்
மேலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டதாகவும் இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது விசாரணை முடிந்த பிறகு முழு விவரமும் தெரியவரும் என விளக்கம் அளித்துள்ளனர்
