கொரடாச்சேரியில் மாபெரும் குதிரை வண்டி எல்கை பந்தயத்தை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார் – 100க்கும் மேற்பட்ட குதிரை வண்டிகள் கலந்து கொண்ட பந்தயத்தை ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் பூண்டியார் நினைவாக முதலாம் ஆண்டு மாபெரும் குதிரை வண்டி எல்கை பந்தயம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட திமுக செயலாளருமான பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்ற இந்த குதிரை பந்தயத்தை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். நாட்டுக்குதிரையை காப்போம் என்ற குறிக்கோளை முன்வைத்து பூண்டியார் நினைவு திருவாரூர் மாவட்ட குதிரை வளர்ப்போர் மற்றும் சாரதிகள் நல சங்கத்தின் சார்பாக இந்த போட்டியில் நூற்றுக்கணக்கான குதிரைகள் சாலைகளில் சீறிப்பாய்ந்தன. நடு குதிரை , சிறிய குதிரை , பெரிய குதிரை உள்ளிட்ட பல்வேறு வகைகளில் நான்குக்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெற்றன. இந்த மாபெரும் குதிரை வண்டி எல்கை பந்தயத்தை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
இந்த குதிரை பந்தயத்தை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் வெகுவாக ரசித்தார் குறிப்பாக தனது மொபைல் போனில் குதிரை ரேக்ளா பந்தயத்தை பதிவு செய்து உற்சாகம் அடைந்தார்.
இந்த நிகழ்ச்சியில்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் , மாவட்ட துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், திருவாரூர் நகர செயலாளர் வாரை பிரகாஷ்,
தலைமை பொதுக்குழு உறுப்பினர் செந்தில், ஒன்றிய செயலாளர்கள் சேகர்கலியபெருமாள்,பாலச்சந்தர்,கூத்தாநல்லூர் திமுக நகர செயலாளர் பக்கிரிசாமி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
