வெளிநாட்டு சமூக ஊடக செயலிகளை பயன்படுத்துவதை மோடி முதலில் நிறுத்த வேண்டும் – மாணிக் தாகூர் எம்பி பேட்டி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கீழ உரப்பனூர் கிராமத்தில் பழைய கிராம பொது சாவடியை அகற்றிவிட்டு புதிதாக கிராம சாவடி கட்டும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.இதில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்க தாகூர் எம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாணிக் தாகூர் எம்பியிடம் ஜி எஸ் டி குறைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளது குறித்த கேள்விக்கு;

2016ல்ஜிஎஸ்டியை மோடி கொண்டு வரும் போது நல்ல திட்டத்தை எப்படி பாழாக்க முடியும் என்பதை பார்க்க முடிந்தது முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் சொன்னது போல எளிமையான வழிமுறையை கொண்டு வருவதை விட்டு சிறு குறு தொழில்களில் பிரச்சனையை உருவாக்கும் ஜிஎஸ்டியாக மாற்றினார்கள். ஏழு எட்டு வருடங்களுக்கு பின்பு திருப்பி ஞானோதயம் பிறந்துள்ளது தீபாவளிக்கு சிறப்பு செய்தி வரும் என கூறியுள்ளார் 18 சதவீதத்தை 5% ஆக குறைக்க வேண்டும் மக்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்களுக்கு ஐந்து சதவீதம் ஜிஎஸ்டி வேண்டும் என்பதுதான் கோரிக்கையாக உள்ளது.ஆனால் பெரும் பணக்காரர்கள் பயன்படுத்துகிற பொருட்களுக்கு 18 சதவீதம் கொண்டு வரவேண்டும் இது தான் ஜிஎஸ்டி நோக்கமாக இருந்தது.

ஆனால் மோடி அரசு ஐஸ்கிரீமில் தொடங்கி பாப்கான் வரைக்கும் பல வகையில் ஏழைகளுக்கு எதிரான நடுத்தர குடும்பத்திற்கு எதிரான வகையில் குழப்பத்தை உருவாக்கிய ஜிஎஸ்டியை கொண்டு வந்துள்ளது.இப்போது அதை குறைப்பதாக சொல்லி இருக்கிறார்கள் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல மத்திய அரசு பல காலத்திற்கு முன்பாக ராகுல் காந்தி சொன்னது போல கேட்டிருக்க வேண்டும். 2016 ல் ராகுல் காந்தி தவறான அணுகுமுறை இதனால் மிகப்பெரிய இழப்பு இந்தியாவிற்கு ஏற்படும் சாமானியர்களுக்கு ஏற்படும் சிறுகுறி தொழில் செய்பவர்களுக்கு ஏற்படும் என்ன இந்த அரசு ராகுல் காந்தி சொன்னதை கேட்காமல் 9 ஆண்டுகளுக்கு பின்பு மாற்றம் கொண்டு வருகிறார்கள்.இந்த மாற்றத்தை காத்திருந்துதான் பார்க்க வேண்டும்அதனால் தீபாவளி வரை பொறுத்து இருப்போம்என்றார்

தொடர்ந்துபிரதமர் மோடி சுதந்திர தின உரையில் யூடியூப்,பேஸ்புக் எக்ஸ் தளம் உள்ளிட்ட வெளிநாட்டு வலைதளங்களை பயன்படுத்தாமல் இந்தியாவிலேயே உருவாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது குறித்த கேள்விக்கு;

முதலில் மோடி யூடியூப்,பேஸ்புக் டுவிட்டர் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.அவர் இந்திய வலைதளத்தை பயன்படுத்த வேண்டும்.ஊருக்கெல்லாம் நியாயம் சொல்லும் மோடி தனக்கு செய்து கொள்ள மாட்டார். யூடியூப் பேஸ்புக் மாதிரி சோசியல் மீடியாக்கள் இந்தியாவில் உருவாவதை வளர விடாமல் தடுத்தவர் மோடி .தற்போது புது டயலாக் புதிய வசனம் புதிய ஸ்கிரீன் ப்ளேவை மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றார்.

ரயில்வே துணைபொறியாளர்கள் பதவி உயர்வுக்கான தேர்வில் ஹிந்தி ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் தமிழ் பயன்படுத்தப்படவில்லை என்பதால் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என எம்பி சு வெங்கடேசன் குறிப்பிட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மாணிக் தாகூர்

மத்திய அரசு தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தொடர்ந்து தமிழ்நாட்டில் இந்தியை திணிப்பதற்காகவும் ஆங்கிலத்தின் மூலமாக தேர்வுகளை நடத்துவதை கைவிடவேண்டும்.ஒரு பக்கம் மத்திய அரசு மாநில மொழிகளுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுப்போம் என்று சொல்வதை செய்லாகமாற்றாமல் அரசு இப்படிப்பட்ட செயல்களை செய்வதை கண்டிக்கிறோம் பாராளுமன்றத்தில் அதற்காக குரல் கொடுத்து தேர்வை ஒத்தி வைக்கும் நடவடிக்கை எடுப்போம் என்றார்.

எடப்பாடி பிரச்சாரத்தால் அதிமுகவிற்கு மக்கள் வாக்களிக்க தயாராகி விட்டார்கள் என அதிமுகவினர் சொல்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த எம்பி மாணிக்தாகூர் எடப்பாடியாரை பொறுத்தவரை சேலத்தை விட்டு இப்போது வெளியே வந்திருக்கிறார். வெளியே வந்து அமித்ஷா தலைமையில் அதிமுகவை நடத்தி வருகிறார். அந்த அமித்ஷா தலைமையிலான அதிமுக ஊரெல்லாம் எப்படி மக்களை கூட்டுகிறார்கள் என்பது தெரியும்.இது அவரது முதல் பயணமாக தெரிகிறது இதில் முக்கியமாக நாம் பார்க்க வேண்டியது என்றால் அதிமுக அமித்ஷாவினுடைய அதிமுக மாறிவிட்டது ஆட்சிக்கு வந்தாலும் அமித்ஷா ஆட்சி தான் நடக்கப் போகிறது.அமித்ஷா தலைமையில்மக்கள் தலைமையை ஏற்றுக் கொள்வார்களா? என்பது தான் கேள்வி என்றார்.

Exit mobile version