தலித்பெண்ணை தொடர்ந்து அவமதித்த மாவட்டஆட்சியர் அழகுமீனா மீது வன்கொடுமை வழக்குப்பதிவு செய்ய MLAதளவாய்சுந்தரம் பேட்டி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அமைந்துள்ள தேரூர் பேரூராட்சியில் பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக வை சேர்ந்த அமுதா ராணி என்பவர் பேரூராட்சி தலைவியாக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் அவர் தலித் பெண் என்றாலும் கிறிஸ்தவ முறை படி திருமணம் செய்து கிறிஸ்தவர் என சான்றிதழ் பெற்றிருப்பதாகவும் இதனை மறைத்து பதவி வகித்து வருவதால் அவரது பதிவியை நீக்கம் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைகிளையில் ஐயப்பன் என்பவரால் மனு தாக்கல் செய்யப்பட்டு, அவரது பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில்
உச்சநீதிமன்றத்தில் அமுதாராணி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உயர்நீதிமன்ற ஆணைக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றுள்ளார். மேலும் பேரூராட்சி தலைவியாக பதவி தொடரவும் பெறப்பட்ட உத்தரவை செயல்படுத்தாமல் தலித் பெண்ணை அவமதிமதிக்கும் விதமாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா செயல்படுவதாக கூறி முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர் கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர் கே.டி பச்சை மால் கழக அமைப்புச் செயலாளர் சின்னத்துரை குமரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஜெய சுதர்சன் உட்பட 50 க்கு மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து தேரூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கலந்து கொண்ட கன்னியாகுமரி எம்.எல்,ஏ., தளவாய்சுந்தரம் கூறும் போது, தலித் பெண் என்பதால் மாவட்ட ஆட்சியர் அலட்சியம் காட்டி வருவதாகவும், உச்ச நீதிமன்றத்தில் தடையானை பெற்ற பின்பும் அதனை அவர் அமல்படுத்தவில்லை தலித்துக்கு எதிராக செயல்படும் குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் பேட்டியளித்தார்.

Exit mobile version