மயிலாடுதுறையில் அரசு உதவிபெறும் கல்லூரியான தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் 539 மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி:- எம்எல்ஏ ராஜகுமார் வழங்கினார்.
தமிழக உயர்கல்வித்துறை சார்பில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று முன்தினம் தொடக்கி வைத்தார். அரசு கல்லூரி மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இத்திட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் 4,427 மாணவ மாணவிகளுக்கு மடிக்கனிணி வழங்கும் திட்டத்தை மயிலாடுதுறை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் அமைச்சர் மெய்யநாதன் நேற்று முன்தினம் வழங்கி தொடங்கி வைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து அரசு உதவி பெறும் கல்லூரியான தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. இக்கல்லூரியில் பயிலும் 539 மாணவ- மாணவிகளுக்கு மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் மடிக்கணினிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில், கல்லூரி செயலாளர் செல்வநாயகம், கல்லூரி முதல்வர் சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
