சட்ட மாமேதை Dr.அம்பேத்கர்69-ஆம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு சிறுபான்மையினர் மரியாதை

டாக்டர் அம்பேத்கரின் 69 ஆம் ஆண்டு நினைவு நாள் இந்தியா முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மேற்கு மாவட்ட செயலாளரும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ.தலைமையில் திருவள்ளூரில் நடை பெற்றது. பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் 200-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு காலை உணவு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளரும் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் சிலம்பு பன்னீர் செல்வம், நகர் மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், பூண்டி ஒன்றிய பொறுப்பாளர். மோதிலால், கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் ரமேஷ், முன்னாள் நகர்மன்ற தலைவர் பொன்.பாண்டியன், உள்ளிட்ட ஒன்றிய நகர, பேரூர் செயலாளர்கள் உட்பட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Exit mobile version