அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர்;
இந்தியாவில் பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் எல்லா இடங்களிலும் வழக்கம் போல் இயங்குகிறது. எந்த பிரச்சினையும் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது மக்களும் பாதிப்பில்லாமல் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் குறித்து உயர் நீதிமன்றத்தின் கருத்து குறித்து சட்ட வல்லுநருடன் கலந்து ஆலோசித்து மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பள்ளி கல்லூரிகள் கட்டுவது குறித்து எடப்பாடி பழனிச்சாமி பேசியது குறித்த கேள்விக்கு இந்தியாவிற்கே வழிகாட்டுவது போல இந்து சமய நலத்துறை அமைக்கப்பட்டது. நீதி கட்சி ஆட்சியில் தான். அந்த நீதி கட்சியின் பின்வந்த எடப்பாடி பழனிச்சாமி, அவர் இப்போது என்ன நிலைப்பாட்டிற்கு மாறி கொண்டு இருக்கிறார் என்பதை காட்டுகிறது அவர் வெள்ளை வெட்டியை கழட்டி விட்டு காவி பேண்டை போடவேண்டிய நிலைக்கு மாறிக்கொண்டிருக்கிறார்.
கோயிலுக்கு வந்தாலும் எந்த நிதியாக இருந்தாலும் மக்களுக்கு மீண்டும் பயன்படுத்த கோயிலுக்கு வருகின்ற பக்தர்கள் எல்லோருமே விரும்புவது எதிர்காலத்தில் வருகின்ற தலைமுறை நன்றாக இருக்க வேண்டும் அவர்களுடைய கல்விக்காக அதனை செலவிடுவது என்பது வேறு தவறான வழியில் செலவிடுவது அல்ல இது குறித்து பல்வேறு விவாதங்கள் நடத்தப்பட்ட போது வாய் திறக்காத எடப்பாடி பழனிச்சாமி தற்போது பேசுவது டெல்லி எஜமானர்கள் பேச சொல்லி உள்ளார்கள்.
டெல்லி எஜமானர்களின் வார்த்தைக்கு ஏற்ப தற்போது நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார் அவரது உண்மை முகம் தற்போது வெளிப்பட்டு வருகிறது என கூறினார்