அரியலூரில் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறும் போது
எடப்பாடி பழனிச்சாமி விரக்தியின் விளிம்பில் இருக்கிறார், முதல் நாள் பேசுவதை மறுநாள் மறுத்து பேசுகிறார், அடுத்த நாள் ஒரு புது கதையை அவரே பேசுகிறார், தான் பேசியதையே வேறு கண் காது மூக்கு வைத்து பேசுவதாக அவரே பேசுகிறார். அவரது ஒவ்வொரு நாளின் வீடியோவையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அவர் எந்த அளவுக்கு விரக்தியில் உள்ளார் என்பது தெரியும்.
அவர் புதிய கூட்டணி அமையும் என்று பார்த்தால் அமையவில்லை, பாஜக அவர் தோளின் மீது ஏறி அமர்ந்து கொண்டு பாஜகவின் கொள்கைகளை இவர் பேசும் அளவிற்கு கொண்டு வந்துள்ளனர். தூக்கி சுமக்கின்ற சுமையின் வலி தாங்காமல் பிதற்றுகிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி வலுவாக உள்ளதை பார்த்து தான் எல்லோரையும் விமர்சிக்கிறார், அவர் நினைத்தது நடக்கவில்லை எதிர்பார்த்தது நடக்கவில்லை என்பதால் விரக்தியின் விளிம்பிலிருந்து பேசுகிறார்.
நாம் தமிழர் கட்சியின் ஆடு மாடுகளின் பொதுக்கூட்டம் குறித்து கேட்டபோது கடைசியாக அவர் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று அப்படியே ஆகிவிட்டது என்பதுதான் பரிதாபத்துக்குரியது என்று அவர் மக்களைத் தான் மாக்களாக நினைத்துதான் பேசுவார். அவர் எதிரே உள்ள மக்களையே மனிதர்களாக நினைத்து பேச மாட்டார்,
வாய்க்கு வந்தபடி பேசுவார் அதன் உச்சமாக உண்மை நிலையை வெளிப்படுத்துகின்ற வகையில், இந்த காட்சியை பார்க்கும்போது தமிழ்நாட்டு மக்கள் பார்க்கும்போது விழுந்து விழுந்து சிரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அவருடைய கடைசி கட்டம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது என கூறினார்.