தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை அமைச்சர் சாமு நாசர்,குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்

திருவள்ளூர் மாவட்டம் நிர்வாக சார்பில் நடைபெற்ற
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை அமைச்சர் சாமு நாசர், குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
இதில் பாரதியார் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களின் பிள்ளைகள் அதிக அளவில் பங்குபெற்று பயனடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம்
ஆவடி தொகுதிக்குட்பட்ட சத்தியமூர்த்தி நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு துறை சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாமானது நடைபெற்றது. இதில் சிறுபான்மையின நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சாமு நாசர், கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து
100க்கு மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.

மேலும்
இம்முகாமில் 150க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து தங்களுக்கு தொழில் நிறுவனங்களின் உள்ள 10 ஆயிரம் காலியிடங்களை நிரப்புவதற்கான
வேலைவாய்ப்பு
நேர்முக கானல் தேர்வு நடத்தப்பட்டன.

மேலும்
மகாகவி பாரதியார் கட்டிடம், மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் சங்த்தின்
மாநில தலைவர்
தனலட்சுமியின், தலைமையில்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள
நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய கட்டுமான தொழிலாளர்களின் பிள்ளைகள் படித்துவிட்டு வேலை தேடிக்‌ கொண்டிருக்கும் மாணவர்களை கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட
இந்த வேலை வாய்ப்பு முகாமை பற்றி எடுத்துரைக்கப்பட்டு அவர்களை அழைத்து சென்று முகாமில் கலந்து கொண்டு பயனடை செய்தனர்.

மேலும்
இதுபோன்ற வேலை வாய்ப்பு முகாம்களை ஏற்படுத்தி தந்து அதன் மூலமாக எங்களுக்கு வேலை கிடைக்க செய்த தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு
மாணவர்களின் சார்பில் நன்றிகளை தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில்
ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், மாநகர ஆணையர் சரண்யா, ஜெரால்டு, ரமேஷ் மாநகர செயலாளர்கள் சண்பிரகாஷ் ,பேபி சேகர் மண்டல குழு தலைவர் ராஜேந்திரன், தேசிங்கு கமலேஷ் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்

Exit mobile version