திருவள்ளூர் மாவட்டத்தில் விளையாட்டு அரங்கம் அமைக்கவேண்டும் என இளைஞர்கள் நீண்ட நாள் கோரிக்கை வைத்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழக துணை முதலமைச்சரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாவட்டத்திற்கு ஒரு விளையட்டு அரங்கம் என்ற அடிப்படையில் 2.50 கோடி ரூபாய் நிதியும், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 50,லட்சம் ரூபாய் நிதியும் என மொத்தம் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி காக்களூரில் நடைபெற்றது. இதில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்து, பொது மக்களுக்கு காலை உணவினையும் அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், திருவள்ளூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயசீலன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும், திமுக நிர்வாகிகளும்,பொது மக்களும் கலந்து கொண்டனர்.

















