திருவள்ளூரில் தூய்மைபணியாளர்களுக்கு நலத்திட்டஉதவி வழங்கிய அமைச்சர்S.M.நாசர் அவர்களுடன் பிரியாணியை சாப்பிட்டு மகிழ்ந்தார்

திருவள்ளூரில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சா.மு.நாசர் அவர்களுடன் அமர்ந்து பிரியாணியை சாப்பிட்டு மகிழ்ந்தார்

திருவள்ளூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நகர்மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திருவள்ளூர் நகராட்சியில் சேரும் கழிவுகளை தூய்மை பணியாளர்கள் தினந்தோறும் அகற்றி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தூய்மை பணியாளர்கள் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களை பாதுகாத்து அவர்களை ஆரோக்கியமாக வாழ அவர்கள் உழைத்து வருவதாக அவர் தெரிவித்தார். அதனை தொடர்ந்து தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர் சா.மு.நாசர், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன், திருவள்ளூர் நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திர்ன, முன்னாள் நகர் மன்ற தலைவர் பொன் பாண்டியன் ஒன்றிய செயலாளர்கள் தா.மோதிலால், கூளூர் ராஜேந்திரன் , மோ.ரமேஷ், அரிகிருஷ்ணன்உள்ளிட்டவர்கள் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டனர்.

Exit mobile version