அன்புமணி சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டால் சிறைக்குத்தான் செல்ல வேண்டும் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் விழுப்புரத்தில் பேட்டி.

அன்புமணி சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டால் சிறைக்குத்தான் செல்ல வேண்டும், இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்தோரின் குடும்பத்தினருக்கு திமுக அரசு மாதம் ரூ.3,000 வழங்கி வருகிறது – சிலர் இதை வைத்து அரசியல் செய்கிறார்கள்;அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் விழுப்புரத்தில் பேட்டி.

விழுப்புரம் வழுதரெட்டி – 21 சமூக நீதி போராளிகள் மணிமண்டபத்தில் வீரவணக்க நாள். விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டியில் அமைந்துள்ள 21 சமூக நீதி போராளிகள் மணிமண்டபத்தில் இன்று காலை வீரவணக்க நாளை முன்னிட்டு, வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 தியாகிகளின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ் உள்ளிட்டோர் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,

“இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்தோரின் குடும்பத்தினருக்கு திமுக அரசு மாதம் ரூ.3,000 வழங்கி வருகிறது. சிலர் இதை வைத்து அரசியல் செய்கிறார்கள்; ஆனால் அந்த குடும்பங்களை பார்க்கவில்லை.

இடஒதுக்கீடு தொடர்பாக நீதியரசர் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. எத்தனை பேர் படித்திருக்கிறார்கள், எத்தனை பேர் இன்னும் இருக்கிறார்கள் என ஆராய்ந்து முடிவு செய்யப்படுகிறது. கமிஷன் முடிவுக்குப் பிறகு, நீதிமன்ற உத்தரவின் பேரில் இடஒதுக்கீடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

அன்புமணி சிறை நிரப்பு போராட்டம் குறித்த கேள்விக்கு நகைச்சுவையாக போராட்டம் செய்தால் சிறைக்குத்தான் செல்ல வேண்டும் என்று பதில் அளித்த அவர், “யார் துரோகி என்பதை மக்களே அறிவார்கள். இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த குடும்பங்களை பாமக காப்பாற்றியதா? தங்களுடைய கட்சிக்காரர்களையே காப்பாற்ற முடியவில்லை. எடப்பாடி குறித்த கேள்விக்கு நன்றி மறப்பதற்கான உதாரணம் எடப்பாடிதான்” என்று தெரிவித்தார்.

Exit mobile version