மயிலாடுதுறையில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை,அமைச்சர் மெய்யநாதன் பார்வை

மயிலாடுதுறையில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை, அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு, கபடி, கூடைபந்து, ஓட்டப்பந்தயம் இறுதிப்போட்டிகளை தொடக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2025-2026-ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளி மற்றும் பொதுப்பிரிவு என 5 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது. மாவட்ட அளவிலான இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் மாநில போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவார்கள். இந்நிலையில், சாய் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பார்வையிட்டார். அப்போது, கபடி, கூடைபந்து, ஓட்டப்பந்தயம் ஆகிய விளையாட்டுப் போட்டிகளுக்கு நடைபெற்ற இறுதிப்போட்டிகளை அவர் தொடக்கி வைத்தார். வாலிபால் விளையாட்டு போட்டிகளை சர்வீஸ் போட்டு அமைச்சர் மெய்யநாதன் துவங்கி வைத்த நிலையில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் மற்றும் பூம்புகார் எம்.எல்.ஏ சர்வீஸ் போட்டு மகிழ்ச்சி அடைந்தனர். முன்னதாக கால்பந்து பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்களை அழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்ட அமைச்சர் மைய நாதன் நன்றாக விளையாடும் ஆறு பாராட்டு தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், எம்எல்ஏக்கள் நிவேதா எம்.முருகன், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Exit mobile version