மயிலாடுதுறையில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமை அமைச்சர் மெய்யநாதன் தொடக்கிவைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட கூறைநாட்டில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டு, இன்றைய முகாமில் மனு வழங்கியவர்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, ஒரு பயனாளிக்கு சொத்துவரி பெயர் மாற்றம், ஒரு பயனாளிக்கு பிறப்பு சான்று, இரண்டு பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை, மூன்று பயனாளிகளுக்கு புதிய மின் இணைப்பு மற்றும் வேளாண்மைத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தில் ஜூலை 15 முதல் அக்டோபர் 15 வரை நகர்புற பகுதிகளில் 32 மற்றும் ஊரகப் பகுதிகளில் 98 என மொத்தம் 130 முகாம்கள் நடத்தப்படுகிறது. இதுவரை நடத்தப்பட்ட 92 முகாம்களில், 42,168 மனுக்கள் பெறப்பட்டு, 20,335 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Exit mobile version