குத்தாலம் மகா மாரியம்மன் ஆலயத்தில் தை மாத மூன்றாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு நடைபெற்ற பால்குட ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர் :-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் பழமை வாய்ந்த மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் ஆண்டு தை மாத திருவிழா கடந்த 26 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்சியான பால்குட ஊர்வலம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு காவிரி ஆற்றங்கரையிலிருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலம் நடைபெற்றது. பல்வேறு பக்தர்கள் சுவாமி அருள் வந்து ஆடிய நிலையில் ஊர்வலம் ஆக ஆலயத்தை வந்தடைந்தனர். தொடர்ந்து சுவாமிக்கு 108 பால் குடங்கள் கொண்டு பாலபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்
