பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி கறவை மாடுகளுடன் விவசாயிகள் போராட்டம் ….
அக்டோபர் 22 ஆம் தேதி முதல் தமிழக முழுவதும் பால் நிறுத்தும் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்கத்தினர் அறிவிப்பு ….
தமிழகத்தில் உள்ள ஆவின் பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்து விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது
தற்பொழுது பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு 38 ரூபாயும் எருமை பால் லிட்டர் ஒன்றுக்கு 48 ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது கால்நடை தீவனங்கள் விலையற்றம் மற்றும் பராமரிப்பு செலவு அதிகரித்துள்ளதால் தற்பொழுது வழங்கப்பட்டிருக்கும் தொகையிலிருந்து ஒரு லிட்டருக்கு 15 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் பல்வேறு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று சேலம் தளவாய்பட்டி பகுதியில் உள்ள சேலம் ஆவின் பால் பண்ணை முன்பு, பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 15 ரூபாய் உயர்த்தி வழங்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்துகண்டன கோஷங்கள் எழுப்பினர். மேலும் போராட்டத்தில் கரவை மாடுகளுடன் விவசாயிகள் பங்கேற்று தங்களுடைய கோரிக்கைகளை வெளிப்படுத்தினர் மாநில தலைவர் வேலுசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு எங்களுடைய கோரிக்கையை ஏற்று லிட்டருக்கு 15 ரூபாய் உயர்த்தி வழங்கவில்லை என்றால் வருகின்ற அக்டோபர் மாதம்22 ஆம் தேதி முதல் பால் நிறுத்தும் போராட்டம் நடத்தப்படும். அதேபோல வேறு மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு பால் இறக்குமதி செய்தாலும் அதனையும் தடுத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.















