பதவிவெறியில் ஆளுங்கட்சியை ஆதரித்து வாக்களித்த ADMK துரோகிகளை MGR,ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது

பதவி வெறியில் ஆளுங்கட்சியை ஆதரித்து வாக்களித்த அதிமுக துரோகிகளை எம்ஜிஆர் ஜெயலலிதாவின் ஆன்மாக்கள் ஒருபோதும் மன்னிக்காது என மன்னார்குடியில் அதிமுக மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் பேட்டி .
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுகவின் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் புவனேஸ்வரி இன்று இரவு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் இயக்கத்தை புரட்சித் தலைவியின் மறைவிற்குப் பிறகு கழகம் பல இன்னல்களை சந்தித்தபோது புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பொறுப்பேற்று புயல், வெள்ளம், வறட்சி, கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் சிறப்பான நல்லாட்சி வழங்கி தமிழ்நாட்டை வளர்ச்சி அடையச் செய்தார். அதிமுகவுக்கு உள்ளேயும் வெளியேயும் பல இடர்பாடுகள் வந்த போது அவற்றை திறம்பட கையாண்டு தொண்டர்களின் நம்பிக்கையை வென்றெடுத்து கழகத்திற்கு அரணாய் நின்றவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சிறிய வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சியை இழந்திருந்தாலும் எதிர்க்கட்சி தலைவராக தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக என்ற திடீர் கட்சி சுனாமி போல வந்து யாரும் எதிர்பார்க்காத வெற்றியைப் பெற்றிருந்தாலும் ஆட்சி அமைக்க முடியாத நிலையில், கழகத்தின் முடிவுக்கு மாறாக சட்டமன்ற கொறடா உத்தரவை மீறி பதவி வெறியில் ஆளுங்கட்சியை ஆதரித்து வாக்களித்த கழக துரோகிகளை, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் ஆன்மாக்கள் ஒருபோதும் மன்னிக்காது . புரட்சித்தலைவி அம்மா காலத்தில் கழகம் பல அதிர்ச்சிகரமான படுதோல்விகளை சந்தித்திருந்தாலும், தொண்டர்களின் துணையுடன் மீண்டும் வீறு கொண்டு எழுந்து ஆட்சியைப் பிடித்தது தான் வரலாறு. தொண்டர் படையும், வலுவான கட்டமைப்பும் கொண்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆலமரமாய் கழகத்தை தாங்கி நிற்கிறார். சில விழுதுகளை இழந்தாலும் ஆலமரம் உறுதியுடன் நிற்பது போல நம் கழகம் வலிமை பெறும் . திருவாரூர் மாவட்டத்தில் நாங்கள் அனைவரும் எடப்பாடியார் பக்கம்தான் நிற்கின்றோம் . விரைவில் புரட்தித்தமிழர் வழிகாட்டுதலுடன் நாளை நல்லாட்சி அமைக்க போவது உறுதி அதற்காக அனைவரும் அயராது பாடுபடுகிறோம் . சிலர் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகமாக இருக்கின்றதால் அவர்களின் முடிவு சரி என்று சொல்கிறார்கள் . ஆனால் சட்ட வல்லுனர்கள் கூறுவது என்னவென்றால் மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உயர் நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கி இருக்கிறது என்றால் தேர்தல் ஆணையம் அங்கீகரித்த கொறடாவை நியமிக்கும் உரிமை உண்டு என்று சொல்கிறார்கள் அப்படி பார்த்தால் சட்டமன்ற கொறடா உத்தரவை மீறியது செல்லாது . கழக உறுப்பினர்கள் அனைவரும் பொதுச்செயலாளர் எடப்பாடியார் பக்கமே கழகம் இருக்கிறது . கழக துரோகிகளை புரட்சித்தலைவர் , புரட்சித்தலைவி ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது . கழகத்தினர் அனைவரும் மீண்டும் நல்லாட்சி அமைய பாடுபட வேண்டும் என தெரிவித்தார்.

Exit mobile version