தமிழ் மொழிக்காக உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் – ஜோலார்பேட்டையில் உணர்வுபூர்வ மாவட்டம் மாணவரணி சார்பாக பொதுக்கூட்டம்
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை:
தமிழ் மொழியின் உரிமை, அடையாளம் மற்றும் எதிர்காலத்தை காக்க தங்களின் உயிரையே தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாளை முன்னிட்டு, திருப்பத்தூர் மாவட்ட திமுக மாணவரணி சார்பில் ஜோலார்பேட்டை மஞ்சுநாதா தியேட்டர் அருகே மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பேச்சாளர்கள், டி கே எஸ் இளங்கோவன் செய்தி தொடர்பு“குழு தலைவர்2000 ஆண்டுகளுக்கு முன்னரே உலகின் பல மொழிகளில் இலக்கியங்கள் இருந்தாலும், பெண்களுக்கும் சமத்துவம் வழங்கிய மொழியாக தமிழ் மொழியே திகழ்கிறது. சங்க இலக்கிய காலத்தில் மட்டும் 59 பெண்பால் புலவர்கள் தமிழ் இலக்கியங்களை படைத்துள்ளனர். இது தமிழின் தனித்துவத்தையும், சமூக சமத்துவத்தை முன்னோக்கி சிந்தித்த மொழி என்பதையும் உலகிற்கு எடுத்துக் காட்டுகிறது” என பெருமிதத்துடன் பேசினர்.
மேலும், தமிழ் மொழிக்கு ஏற்பட்ட அடக்குமுறைகளுக்கும், அதன் வளர்ச்சியைத் தடுக்கும் முயற்சிகளுக்கும் எதிராக நடைபெற்ற மொழிப்போர் போராட்டங்களின் வரலாறும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. தங்களின் உயிரையே ஈந்த மொழிப்போர் தியாகிகள், தமிழின் உரிமைக்காகவும், தாய்மொழியின் மரியாதைக்காகவும் அச்சமின்றி போராடி, தங்கள் உயிரை நாட்டுக்காக அர்ப்பணித்தனர். அவர்களின் தியாகம் இன்றைய தலைமுறைக்கு தமிழை தலைநிமிரச் செய்த வரலாற்றுச் சான்றாகும் என பேச்சாளர்கள் கூறினர்.
தமிழ் மொழி காக்கும் போராட்டங்களில் உயிர்நீத்த தியாகிகளின் நினைவுகள் என்றும் மங்காது என்றும், அவர்களின் தியாகத்தை மறக்காமல் தொடர்ந்து தமிழ் மொழி உரிமைக்காக போராடுவது இளைஞர்களின் கடமை என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றி, மொழிப்போர் தியாகிகளுக்கு மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினர்.
மேலும் மாவட்ட ஒன்று குழு தலைவர் எம்.கே.ஆர் சூரியகுமார். மாவட்ட துணைச் செயலாளர். டி கே மோகன். சம்பத்.மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளர்கள் டி.சி. கார்த்தி, கே. சுபாஷ், எஸ். பிரபாகரன், ஜெ. அம்சவேணி, ஜெயக்குமார் நகர செயலாளர் ஜோலார்பேட்டை அன்பழகன் திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ் ராஜேந்திரன். ஒன்றிய குழு தலைவர் சத்ய சதீஷ். ஒன்றிய செயலாளர்கள் ஜோலார்பேட்டை. கவிதா தண்டபாணி. உமா கண்ணுறங்கும். சதீஷ்குமார். பொதுக்குழு உறுப்பினர் ரகுநாத். திருப்பத்தூர் நகர மாணவரணி அமைப்பாளர் தின. நகர மாணவனை துணை அமைப்பாளர் விஜய் மற்ற அணியின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் பொறுப்பாளர்கள் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
இந்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு, மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தை நினைவுகூர்ந்து, தமிழ் மொழி பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சி முழுவதும் தமிழின் பெருமையும், தியாகிகளின் வீரமும் உணர்வுபூர்வமாக எடுத்துரைக்கப்பட்டு, “தமிழ் வாழ்க” என்ற முழக்கத்துடன் நிறைவுபெற்றது.














