பூம்புகார் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் செயல்வீரர் மற்றும் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

பூம்புகார் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் செயல்வீரர் மற்றும் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக ஆறுபாதி விளையாட்டு மைதானத்தில் செயல்வீரர் மற்றும் பூம்புகார் தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பூம்புகார் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் நிவேதா எம். முருகன் எம்.எல்.ஏவை அறிமுகப்படுத்தி உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கூட்டணி கட்சி மாவட்ட பொறுப்பாளர்கள் உரையாற்றினர். இந்நிகழ்ச்சியின் இறுதியில் மாற்றுக் கட்சியினர் சட்டமன்ற வேட்பாளர் நிவேதா முருகன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version