தேனியில் ஐந்தாவது நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர்
திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல காலமுறை ஊதிய உயர்வு, காலிப்பணியிடங்கள் நிரப்புதல், ஓய்வூதியம் உள்ளிட்ட பல அம்ச கோரிக்கை வலியுறுத்தி சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாட்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கைது செய்யப்பட்டு இருந்தனர்
இந்த நிலையில் ஐந்தாம் நாளான இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுமார் 500க்கும் மேற்பட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் இரண்டு நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல காலமுறை ஊதிய உயர்வு, ஓய்வூதியம், காலி பணியிடங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
இவர்களுக்கு ஆதரவாக தேனி மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்றக் கழக சார்பில் போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்
தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் பாலா தலைமையில் அதிமுக நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்

















