மயிலாடுதுறையில் நடைபெற்ற கால்நடைகளுக்கான மருத்துவ முகாம்

மயிலாடுதுறையில் நடைபெற்ற கால்நடைகளுக்கான மருத்துவ முகாமில் பரிசோதனை செய்து குடல்புழு நீக்கம், சினை ஊசி, பெரியம்மை மற்றும் வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது

மயிலாடுதுறை கிங்ஸ் ரோட்டரி சங்கம் மற்றும் திருஇந்தளூர் ஊராட்சி இணைந்து நடத்திய கால்நடைகளுக்கான இலவச மருத்துவ முகாம் மற்றும் தடுப்பூசி முகாம் திருஇந்தளூர் கிராம நிர்வாக அலுவலக கட்டட வளாகத்தில் நடைபெற்றது.

கிங்ஸ் ரோட்டரி சங்க தலைவர் அய்யாசாமி தலைமையில் நடைபெற்ற
இந்த முகாமில், அரசு கால்நடை உதவி மருத்துவர்கள் விஷ்ணுபிரியா, இளஞ்செழியன் மற்றும் மருத்துவக்குழுவினர் கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து குடல்புழு நீக்கம், சினை ஊசி, பெரியம்மை மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்தினர்.

இதில் திருஇந்தளூர், பல்லவராயன்பேட்டை, மாப்படுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து
அழைத்து வரப்பட்ட 50-க்கும் மேற்பட்ட கால்நடைகள் மற்றும் செல்லபிராணிகள் பயனடைந்தன. முகாமிற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறையில் கிங்ஸ் ரோட்டரி சங்கத்தினர் மற்றும் திருஇந்தளூர் ஊராட்சி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Exit mobile version