கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு காவலர் தின விழாவில் காவல்துறையில் 35 ஆண்டுகள் பணி நிறைவு செய்த காவலர்களுக்கு பதக்கங்கள் மற்றும் வாழ்த்து மடல்களை வழங்கி கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் .ஸ்டாலின் கௌரவித்தார்.
இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 06ம் தேதி காவலர் தின விழா கொண்டாடப்பட உள்ளது இந்த தினம் ஆனது 1859-ல் மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றப்பட்டதின் நினைவாக தமிழ்நாடு காவலர் தினம் கொண்டாடப்படுகிறது.இதன்படி கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி எஸ் பி தலைமையில் நடந்தது. காவல்துறையில் 35 ஆண்டுகள் பணியாற்றி குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பணியாற்றி வரும் காவலர்களுக்கு பதக்கங்கள் மற்றும் வாழ்த்து மடல்களை குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் வழங்கி சிறப்பு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், காவல் ஆளுநர்கள், காவலர் குடும்பங்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
