குத்தாலத்தில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு , நாங்கள் பெரிய வாக்கு வங்கி உள்ள கட்சி இல்லை , ஆட்சிக்கு வருவோம் என எந்த காலத்திலும் சொன்னதும் இல்லை என பேச்சு :-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் மதிமுக குத்தாலம் பேரூர் செயலாளர் கருணாநிதி இல்ல திருமண விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து மேடையில் மணமக்களை வாழ்த்தி பேசிய நிலையில் மறுமலர்ச்சி திராவிட கழகம் பெரிய வாக்கு வங்கி உள்ள கட்சி என்று நான் என்றுமே சொன்னதில்லை , கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து நாங்கள் ஆட்சிக்கு வருவோம் எனக் கூறியதில்லை என தெரிவித்தார். நான் திருமண மண்டபத்திற்கு வரும் போது வருங்கால முதல்வர் வாழ்க என விற்பனை ஒருவர் கோஷமிட்டார். இதோடு உங்களது முழக்கத்தை நிறுத்தவும் இதை நான் அந்த காலத்திலேயே தடுத்து விட்டேன் என பதில் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோவிடம் தனியார் தொலைக்காட்சி (நியூஸ் தமிழ்)செய்தியாளர்கள் தாக்கியது குறித்த கேள்வி கேட்கப்பட்டது . இதனை கண்டிப்பதாகவும் , செய்தியாளர்கள் ஜனநாயகத்திற்கு விழிகளாவும் செவியாகவும் இருக்க கூடியவர்கள் என்றும் , செய்தியாளர்களை தாக்குவது அக்கிரமானது , சம்பந்தப்பட்ட நபர்களை காவல்துறை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் . ஆட்சியில் பங்கு என்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்காமல் சட்டென காரில் புறப்பட்டு சென்றார்.
