மயிலாடுதுறையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டத்தில் தவெகா குடையுடன் அமர்ந்திருந்த பெண் தொண்டர்:-
மயிலாடுதுறை சின்னக்கடை தெருவில் மதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம் நடைபெற்றது. மதிமுக துணை பொதுச் செயலாளர் ஆடுதுறை முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தைப் போற்றி சிறப்புரையாற்றினார். அப்போது, மழை தொடங்கியதால் மேடை முன்பு அமர்ந்து இருந்த தொண்டர்கள் பெரும்பாலானோர் குடைகளை பிடித்தவாரே அமர்ந்து வைகோவின் பேச்சை கேட்டனர். இதில் ஒரு பெண் தொண்டர் மழை தொடங்கியதும் தான் கொண்டு வந்திருந்த தமிழக வெற்றி கழகம் விஜய் உருவப்படம் பொறித்த குடையினை விரித்துப் பிடித்தவாறு கூட்டத்தில் அமர்ந்திருந்தார்.
