மயிலாடுதுறை சுந்தரமூர்த்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி பெருவிழாவினை முன்னிட்டு மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி வீதி உலா காட்சி நடைபெற்றது :-
மயிலாடுதுறை அருகே கூறைநாடு பகுதியில் சுந்தரமூர்த்தி விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 13 ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. ஒன்பதாம் நாள் நிகழ்வாக இன்று மின்னாலியால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விநாயகர் எந்தருள செய்யப்பட்டு வீதியுலா காட்சி நடைபெற்றது.. ஊர்வலத்தில் வழிநெடுகிலும் பக்தர்கள் தீபாராதனை எடுத்து வழிபாடு மேற்கொண்டனர். முன்னதாக சுந்தரமூர்த்தி விநாயகருக்கு ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை மேற்கொள்ளப்பட்டது.













