பாஜக மாவட்ட தலைவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு மயிலாடுதுறை போலீசார் நடவடிக்கை

மயிலாடுதுறை சேந்தங்குடி வடபாதி தெருவை சேர்ந்தவர் ஏசுதாஸ் மகன் இன்பராஜ் இவர் பாஜகவில் சிறுபான்மை பிரிவில் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள அலுவலகம் ஒன்றின் அருகில் பாஜக மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு மற்றும் நிர்வாகிகள் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற இன்பராஜ், தான் 25 ஆண்டுகளுக்கு மேலாக பாஜகவில் பணியாற்றி வருவதாகவும், தனக்கு கட்சியில் மாநில அளவில் பொறுப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

இதில் காயமடைந்ததாக இன்பராஜ் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இன்பராஜ் கொடுத்த புகாரின்பேரில் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சையது பாபு, போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து இன்பராஜை சாதியை சொல்லி திட்டி கொலை மிரட்டல் கொடுத்ததாக பாஜக மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு நிர்வாகிகள் சேதுராமன் வாஞ்சிநாதன் ஆகியோர் மீது மயிலாடுதுறை போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version