மயிலாடுதுறையில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு 50 ரூபாய் இலவச பெட்ரோலை, ரோட்டரி கிளப் சார்பில் விநாயகர் வேடமணிந்த நாடகக் கலைஞர் வழங்கினார், செய்தி கேள்விப்பட்டு ஹெல்மெட் உடன் குவிந்த வாகன ஓட்டிகள் :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் கிங்ஸ் ரோட்டரி கிளப் சார்பில் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பான சாலை பயணம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கால்டாக்ஸ் அருகே உள்ள பெட்ரோல் பங்கில், ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு 50 ரூபாய் பெட்ரோல் விலையின்றி வழங்குவதற்கான டோக்கன் வழங்கப்பட்டது. விநாயகர் போல் வேடமிட்டு நாடகக் கலைஞர் வாகனத்தில் நிரப்பினார். செய்தி கேள்விப்பட்டு ஏராளமான வாகன ஓட்டிகள் தலையில் ஹெல்மெட் அணிந்தபடி வரிசையாக அணிவகுத்து நின்றனர். தொடர்ந்து வந்தவர்களுக்கு பெட்ரோல் வழங்கப்பட்டது. பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வது தங்கள் குறிக்கோள் என்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் தெரிவித்தனர்.

















