மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு ஏராளமானோர் வந்து மனு அளித்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலில் பேருந்தில் இருந்து கீழே இறங்கிய பெண் ஒருவர் திடீரென்று தான் கையில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். அப்போது அங்கு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் காயத்ரி தீ வைத்துக் கொண்ட பெண்மணியை மீட்டதில் அவருக்கு கையில் லேசான தீக்காயம் ஏற்பட்டது. இதனை அறிந்து செய்தியாளர்கள் செய்தி எடுக்க சென்றபோது காவல் ஆய்வாளர் கரிகாற்சோழன் செய்தியாளர்களை தடுத்து செய்தி எடுக்க அனுமதிக்காமல் இதைப் போய் எடுக்கிறீர்கள் காமன் சென்ஸ் இருக்கிறதா என்று திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண் தீக்குளித்து அரை மணி நேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் துடித்துக் கொண்டிருந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் வருகைக்காக காத்திருந்த நிலையில் போலீசார் 108 ஆம்புலன்ஸ் வந்தவுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சீர்காழி தாலுக்கா அரசூர் காப்பியகுடியைச் சேர்ந்த மாதுரி என்பதும் தன் மகனை அடித்தது தொடர்பான பிரச்சனையில் தன்னையும் தாக்கியதாகவும் காவல்துறையில் புகார் அளிக்கப்படும் நடவடிக்கை
