மயிலாடுதுறை நகர பாஜக சார்பில் குடியரசு தின விழா கொண்டாட்டம் , பாரதியார் வேடம் அணிந்த சிறுவனுடன் தூய்மை பணியாளர்கள் ஒன்றிணைந்து தேசியக்கொடியை ஏற்றி வைத்தனர்:-
நாட்டின் 77 வது குடியரசு தினம் இன்று பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை நகர பாஜக சார்பில் குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது. பாஜக நகர தலைவர் ராஜகோபால் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தூய்மை இந்தியா பணியாளர் செல்வி மற்றும் நகரத்தில் பணிபுரியக்கூடிய தூய்மை பணியாளர்கள் ஒன்றிணைந்து தேசிய கொடியை ஏற்றி வைத்தனர். மேலும் வருகை தந்திருந்த முன்னாள் மாவட்டத் துணைத் தலைவர் மோடி கண்ணன், நகரத் துணைத் தலைவர் செல்வ குமார், ஈஸ்வரன், பொதுச் செயலாளர் மணிமேகலை, கிளைத் தலைவர் சுந்தர், உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது . பாரதியார் வேடமிட்ட சிறுவன் உட்பட அனைவரும் தேசிய கொடிக்கு வணக்கம் செலுத்தினர் .














