விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் கழக நிறுவனத் தலைவர் ஜைனுதீன் விடுத்துள்ள அறிக்கையில் சென்னை மாவட்ட காஜி எனும் உயர்பொறுப்பு பிற மாவட்ட காஜி பொறுப்பைப் போன்றது கிடையாது. சென்னை மாவட்ட காஜியே தமிழ்நாட்டின் தலைமை காஜியாகப் பார்க்கப்படுகிறார். இதுவரை அவ்வாறுதான் நடைமுறை இருந்து வருகிறது. ஆகவே தகுதியானவரைத் தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்று பொதுமக்களும் உலமாக்களும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். சென்னை மாவட்ட காஜி பதவிக்கு நால்வர் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களுள் மூவரே அரசின் நிபந்தனைகளுக்கேற்ற கல்வித் தகுதியைப் பெற்றிருந்தனர். அவர்களுள் ஒருவர் ஆலிம் எனும் வட்டத்திற்குள் இல்லாதவர் ஆவார். நியமனக் குழுவினர் தேர்வு செய்து கொடுத்த அடிப்படையிலும், பொதுமக்கள் உலமாக்கள் ஆகியோரின் எதிர்பார்ப்பின் அடிப்படையிலும், மூவருள் மிகத் தகுதியானவர் என்ற அடிப்படையிலுமே தற்போதைய சென்னை மாவட்ட காஜி தமிழக முதல்வரால் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
சென்னை மாவட்ட காஜி பதவிக்குப் போட்டியிட்டுத் தேர்வு செய்யப்படாத ஆலிம்கள் இருவர் அமைதியாக இருக்கும்போது, ஆலிம் அல்லாத அந்த ஒருவரும், அவர் சார்பாகச் சிலரும் மாறாக முழுக்க முழுக்கத் தகுதியின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படுவதாகும்.
ஆகவே மிகத் தகுதியானவரான மௌலானா மௌலவி முஃப்தி என்.பீ. உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி அவர்களைத் தமிழக முதல்வர் நியமனம் செய்து அறிவித்தது மிகச் சரியானதும் நியாயமானதும் ஆகும். மௌலானா மௌலவி உஸ்மான் மொய்தீன் தாமத் பரக்காத்துஹு அவர்களை தமிழ்நாடு தலைமை காஜியாக நியமனம் செய்த தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு முஸ்லிம் மக்கள் கழகத்தின் மற்றும் தமிழக முஸ்லிம்கள் சார்பிலும் நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாடு காஜியாக பொறுப்பேற்றுள்ள ஹஜ்ரத் உஸ்மான் மொய்தீன் தாமத்து பரக்காத்துஹு அவர்களை நியமனம் செய்தது சிலருக்கு பிடிக்கவில்லை. ஏனென்றால் இஸ்லாமியருடைய ஷரியத் சட்டத்தையும் விளக்கத்தையும் முழுமையாக அறிந்தவர் தான் ஹஜரத் உஸ்மானிய மொய்தின் அவர்கள் அவர்களுக்கு இப்பொறுப்பு சரியாக இருக்கும் என்றும் இஸ்லாமியர்களுக்கும் தமிழ்நாடு முதல்வருக்கும் ஒரு மிகப்பெரிய பாலமாக அமைவதற்கு தகுதி உள்ளவரை நியமனம் செய்த தமிழ்நாடு முதல்வர் முத்துவேல் கருணாநிதி மு.க. ஸ்டாலின் அவர்களை முஸ்லிம் மக்கள் கழகம் சார்பில் மனதார பாராட்டுகிறேன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்

















