மேகதாட்டு அணை கட்டுமானத்தை தடுத்து நிறுத்திடவும் வருகிற 7-தேதி காவிரி டெல்டா மாவட்டங்கள் மாபெரும் ரயில்மறியல் போராட்டம்

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் மன்னார்குடி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் பயரி எஸ்.கிருஷ்ணாமணி தலைமையேற்றார். மாநில தலைவர் ஆர் திருப்பதி மாவட்ட தலைவர் எம் சுப்பையன் உள்ளிட்டர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது .ஒரு மாத காலமாக வடகிழக்கு பருவமழை காவிரி டெல்டாவில் பேரழிவு பெருமழையாக பெய்து மிகப் பெரிய பாதிப்பை உருவாக்கி இருக்கிறது தொடர்ந்து டெட்வா புயல் தாக்குதலால் மிகப்பெரிய மழை பெய்து ஒட்டு மொத்தமாக காவிரி டெல்டாவில் பெரும்பான்மையான கிராமங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டு விளை நிலங்கள் மூழ்கடிக்கப்பட்டு அழிந்துவிட்டது கிட்டத்தட்ட இதன் மூலம் 5 லட்சம் ஏக்கர் அளவிற்கு பேரழிவு ஏற்பட்டிருக்கிறது 5 லட்சம் ஏக்கர் அளவிலான சம்பா தாளடி பயிர்கள் நீரால் பாதிக்கப்பட்டு சூழப்பட்டு இருக்கிறது அது மறு உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே தமிழ்நாடு அரசு காவிரி டெல்டா மாவட்டங்களை வெள்ளம் பாதித்த மாவட்டங்களாக அறிவிப்பதோடு காவிரி டெல்டா மாவட்டங்களில் 100% வெள்ள நீரால் சூழப்பட்ட கிராமங்களை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களாக மாவட்ட அரசு இதழில் வெளியிட வேண்டும் . அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டிருக்கிற விவசாயிகளுக்கு பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாயை தமிழக அரசு நிவாரணமாக வழங்க வேண்டும் . காப்பீடு செய்யப்பட்டிருக்கிற விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனங்களுக்கு நான்கு கட்டங்களாக இழப்பீடு வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது அதன் அடிப்படையில் தற்போது சம்பா தாளடி பயிர்கள் ஐந்து லட்சம் ஏக்கர் முழுமையாக அழிந்த கிராமங்களில் உடனடியாக வளர்ந்த பயிர் முதிர்ச்சி அடைந்த பயிர் அழிவதை கருத்தில் கொண்டு கிட்டத்தட்ட ஏக்கர் ஒன்றிற்கு 18000 ரூபாய் இழப்பீடாக காப்பீட்டு நிறுவனங்களால் வழங்க முடியும் எனவே தமிழக அரசு பாதிக்கப்பட்ட கிராமங்களை வெள்ளம் பாதித்த கிராமங்களாக அறிவித்து காப்பீட்டு திட்டத்தின் மூலமாக உரிய இழப்பீடை பெற்றுத் தருவதற்கு முன் வர வேண்டும் என வலியுறுத்துகிறேன் . ராசி மணலில் அணைகட்டி தமிழ்நாடு கர்நாடக விவசாயிகள் பயன் பெறுகிற வகையில் ஆணையமே ராசி மணலில் அணை கட்டுவதற்கான தீர்மானத்தை முன்மொழிந்து இரு மாநிலங்களிலும் ஒத்தகருத்தை உருவாக்கி இரு மாநில விவசாயிகளையும் மக்களையும் ஒன்றுபடுவதற்கான முயற்சியை ஆணையம் மேற்கொள்ள வேண்டும் இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும் எனவே ஆணையத்தை வலியுறுத்தி மேகதாட்டு அணை கட்டுமானத்தை தடுத்து நிறுத்திடவும் ராசி மணலில் அணை கட்டுவதற்கு ஒத்த கருத்தை ஆணையம் உருவாக்கிடவும் வலியுறுத்தி வருகிற ஏழாம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்கள் தழுவிய அளவில் காவிரி மேலாண்மை ஆணையத்தை கவனத்தை ஈற்கின்ற வகையில் திருவாரூரில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கிற மாபெரும் ரயில் மறியல் போராட்டத்தை தமிழக காவிரிகள் விவசாயிகள் சங்கம் நடத்த இருக்கிறது அந்த போராட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பங்கேற்க வேண்டும் என்று அரை கூவல் விடுகிறோம் அந்தப் போராட்டத்தில் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இந்த வளர்ந்த பயிர் பாதிப்பு ஏற்ப சுமார் 18000 ரூபாய் ஏக்கர் ஒன்றிற்கு நிவாரணமாக காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் இந்த ரயில் மறியல் போராட்டத்தில் வலியுறுத்த இருக்கிறோம் விவசாயிகள் முழுமையாக பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Exit mobile version