பாக்தாத் : ஈராக்கின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய ஷாப்பிங் மாலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் தீவிரமாக காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் அல்-குட் நகரில் நடந்துள்ளது. ஐந்து மாடிகள் கொண்ட இந்த ஷாப்பிங் மாலில் திடீரென தீப்பற்றியதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பும் சோகமும் ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். எனினும், பலர் உடனடியாக வெளியேற முடியாத நிலையில் உயிரிழப்பை சந்தித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமைமை மிகக் கவலைக்கிடமாக இருப்பதாகவும், இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் மருத்துவத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்திற்கான காரணம் இன்னும் முற்றிலும் கண்டறியப்படவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகின்றது. இதில் சுலபமான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது தொடர்பாகவும் விசாரிக்கப்படுகின்றது.
இந்த தீ விபத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து அடுத்த 48 மணி நேரத்தில் முழுமையான அறிக்கை வெளியிடப்படும் என அந்நாட்டு கவர்னர் அறிவித்துள்ளார். மேலும், ஷாப்பிங் மால் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன.