கட்சி ஆரம்பித்த உடனே முதலமைச்சர் ஆகலாம் என பலர் நினைக்கின்றனர் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கட்சி ஆரம்பித்த உடனே முதலமைச்சர் ஆகலாம் என பலர் நினைக்கின்றனர். அது எப்போதும் நடக்காது. – அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

நீட் குறித்து திமுக ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் 7.5% இட ஒதுக்கீட்டினை எடப்பாடி கே பழனிச்சாமி கொண்டு வந்து ஏழை மாணவர்களையும் மருத்துவ படிப்பு படிக்க திட்டம் கொண்டு வந்துள்ளார்.

திண்டுக்கல் அதிமுக மேற்கு மாவட்டம் சார்பில் வருகின்ற ஆறாம் தேதி மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தர உள்ள நிலையில் அவருக்கு எழுச்சி மிகுந்த உற்சாகம் மிகுந்த வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம்முன்னாள் அமைச்சர் மாண்புமிகு கழகப் பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமையில் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும்,கழகத் தலைமை நிலைய செயலாளருமான,சட்டப்பேரவை எதிர்க்கட்சி கொரடா மாண்புமிகு எஸ். பி வேலுமணி கலந்து கொண்டுள்ளனர்.

இதில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மேடையில் பேசும் போது,

இந்நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் மருதராஜ் ,கழக இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னம்பட்டி பழனிச்சாமி, பிரேம்குமார். திண்டுக்கல் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சி எஸ் ராஜமோகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் இதில் கலந்துகொண்டனர்.

முன்னதாக கழக தலைமை நிலைய செயலர், முன்னாள் அமைச்சர் மாண்புமிகு எஸ்பி வேலுமணி அவர்களுக்கு கழக நிர்வாகிகள் பொன் துகில் மற்றும் மாலைகள் அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Exit mobile version