திருவாரூரில் வாரத்தில் ஐந்து நாட்கள் வேலையை அமல்படுத்த வலியுறுத்தி ஏராளமான வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாரத்தில் 5 நாள் வேலை கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா முழுவதும் 8 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபடுவதால், தொடர்ந்து 4-வது நாளாக வங்கிச் சேவைகள் முடங்குகின. நாடு தழுவிய இந்த வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக திருவாரூர் பாரத ஸ்டேட் வங்கி அலுவலகம் முன்பு, அனைத்து வங்கி ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் வாரத்தில் ஐந்து நாள் வேலையை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கண்டனம் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வங்கி ஊழியர்களின் இந்த ஆர்ப்பாட்டத்தினால் தொடர்ந்து நான்காவது நாளாக திருவாரூர் மாவட்டத்தில் வங்கி சேவைகள் முடங்கி உள்ளதால் திருவாரூர் மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
