வீரர் என்று அழைக்கப்படும் P.ஜீவானந்தம் அவர்களின் 63வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மனோ தங்கராஜ் மரியாதை

வீரர் என்று அழைக்கப்படும் பா ஜீவானந்தம் அவர்களின் 63வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அவரது மணிமண்டபத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அழகு மீனா நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் பேட்டி.

மாநில நிதி சீராக இருப்பதாக நம்பியதால் அதிமுக தற்போது தேர்தல் அறிக்கையில் 2000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
மாநில நிதி சரியாக உள்ளதாக அதிமுக நம்பியதற்கு எங்கள் பாராட்டுகள்.

அதிமுக அறிவித்துள்ள தேர்தல் அறிக்கைக்கு வழிகாட்டிய இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம்.

கூட்டணி ஆட்சி என்னும் கருத்தை காங்கிரஸ் கைவிடுவதாக பேசியுள்ளார்கள், எது வந்தாலும் எங்கள் தலைவர் கூட்டணி கட்சிகளை சுமூகமாக பேசி வழிநடத்தும் ஆற்றல் கொண்டவர். வரும் காலங்களிலும் சிறப்பாக வழிநடத்துவார்.

Exit mobile version