மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் வைர கிரீடம் திருப்பணி உண்டியல் திறக்கப்பட்டு, எண்ணப்பட்டத்தில் ரூ 13 லட்சம் காணிக்கை இருந்தது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் புகழ்பெற்ற வைணவ ஆலயங்களில் பழமை வாய்ந்த கோயிலில் உள்ள உண்டியல் திக்கக்கப்பட்டு,எண்ணப்பட்டத்தில் ரூ 13 லட்சம் காணிக்கை இருந்தது. இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இக்கோயிலில் 10 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை 6 மாதங்களுக்கு ஒரு முறை திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்படுகிறது. இதில் வைர கிரீடம் திருப்பணி உண்டியல் 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று எண்ணியதில் ரூ 13 லட்சம் காணிக்கை இருந்தது . இதில் அறநிலையத்துறை நாகை மண்டல துணை ஆணையர் ராணி, கோயில் செயல் அலுவலா் எஸ். மாதவன் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில் ரூ. 13 லட்சம் ரொக்கம் , 10.5 கிராம் தங்கம் , 49.5 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.
