சீர்காழியில் வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய மண்டலபிஷேக பூர்த்தி விழா

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயிலடி சாலையில் மார்கோனி மந்திராலயா கார்டனில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய கும்பாபிஷேகம் விமர்சியாக நடைபெற்றது. வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஆலய மண்டலம் பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில்இன்று மண்டலம் பூர்த்தி விழா விமர்சியாக நடைபெற்றது.புனித நீர் கொண்ட கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டு பூர்ணகதைக்கு பின் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை ஸ்ரீ வேல்முருகன் சுவாமிக்கு மாப்பொடி, மஞ்சள் பொடி,திரவிய பொடி, பால் ,சந்தனம், பஞ்சாமிர்தம் , உள்ளிட்டவைகளை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர், தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Exit mobile version