ATM இயந்திரத்தை உடைத்துபணத்தை திருட முயன்ற நபர் கைது

அண்ணாநகரில் உள்ள வங்கி யுவுஆ இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்ற நபர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை, அண்ணாநகர், ரவுண்டனா எஸ்.பி.ஐ. வங்கி கிளை மேலாளர், நேற்று காலை, மு-4 அண்ணா நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், 09.10.2025 அன்று அதிகாலை, அண்ணா நகர், டபிள்யூ பிளாக், 5வது பிரதான சாலையில் SBI வங்கி ATM மையத்தில் ஒரு மர்ம நபர்

ATM கதவை உடைத்து திருடிக் கொண்டிருப்பதாக ஹைதராபாத் CCTV Monitoring மையத்திலிருந்து கிடைத்த தகவலின்பேரில், ATM மையத்திற்கு சென்று பார்த்தபோது, யாரோ ATM கதவை உடைத்துவிட்டு சென்றதாகவும், பணம் எதுவும் திருடு போகவில்லை என்றும் மேற்படி நபரை கண்டுபிடித்து நடவடிக்கை
எடுக்கும்படியும் குறிப்பிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில், மு-4 அண்ணா நகர் காவல் நிலைய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மு-4 அண்ணாநகர் காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்தும், வங்கி ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், மேற்படி திருட்டு முயற்சியில் ஈடுபட்ட எதிரி ராம்குமார்,

6வது அவென்யூ, அண்ணா நகர், சென்னை என்பவரை நேற்று காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைத்தனர்.

Exit mobile version