மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம் : வைகோ அறிவிப்பு

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, கட்சியின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பொதுச் செயலாளர் வைகோ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மதிமுக ஒழுங்கு நடவடிக்கை குழு அனுப்பிய கடிதத்திற்கு மல்லை சத்யா பதில் அளிக்காமல் இருந்ததோடு, குற்றச்சாட்டுகளை மறுக்கவும் இல்லை. மேலும், கட்சியின் கொள்கை, குறிக்கோள், நன்மதிப்பு மற்றும் ஒற்றுமைக்கு எதிரான வகையில் செயல்பட்டதாக அறிக்கையில் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், மல்லை சத்யா கட்சிக்கு விரோதமாக நடந்துகொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சட்ட விதிகள் 19 (5), 19 (12), 35 (14), 35 (15) ஆகிய பிரிவுகளின் கீழ், துணை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து மட்டுமல்லாமல், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகிறார் என வைகோ அறிவித்துள்ளார்.

Exit mobile version