இந்துக்களின் புனிதமஹாசிவராத்திரி மற்றமாநிலங்களுக்குபொதுவிடுமுறை போன்ற தமிழகத்தில் மஹாசிவராத்திரிவிழா

இந்துக்களின் புனித விழாவான மஹா சிவராத்திரி பாரதத்தில் மற்ற மாநிலங்களுக்கு பொது விடுமுறை வழங்குவது போன்று தமிழகத்தில் மஹா சிவராத்திரி புனித விழா கொண்டாட பொது விடுமுறை வழங்க வேண்டும்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் மஹா சிவாலய ஓட்டம் அரசு தனி கவனம் கொடுத்து நிதி ஒதுக்கீடு செய்து சிவ பக்தர்கள் வசதிகளை மேம்படுத்த வேண்டும்
இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர்
பொன்னையா பேட்டி

மஹா சிவராத்திரி இந்துக்களின் மிக பெரிய புனித விழா மாபெரும் விழா பாரத தேசம் முழுவதும் நடக்கும் விழா இந்த விழாவிற்கு தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் பொது விடுமுறை உள்ளது தமிழகத்தில் மட்டும் விடுமுறை இல்லை மஹா சிவராத்திரி விழாவை மக்கள் கொண்டாடும் வகையில் அன்றைய தினம் விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவிக்க வேண்டும் இது இந்துக்கள் மற்றும் இந்து முன்னணியின் நீண்ட கால கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் மஹா சிவராத்திரி முன்னிட்டு 108 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள 12 சிவன் கோயில்களுக்கு விரதமிருந்து சிவாலய ஓட்ட புனித யாத்திரை செல்கிறார்கள் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க புனித யாத்திரை நடந்தும் ஓடியும் வாகனங்கள் மூலமாகவும் பக்தர்கள் செல்கின்றனர் பல ஆயிரம் ஆண்டுகளாக இதை கடை பிடித்து வருகின்றனர் இந்த 12 கோயில்களுக்கு செல்லும் சாலைகள் பல மிக மோசமாக உள்ளது மக்கள் நடக்க கூட முடியாத சூழ்நிலை உள்ளது ஆனால் பக்தர்கள் ஓடி செல்லும் சூழ்நிலை உள்ளது ஆகவே உடனடியாக சாலைகளை பழுது பார்க்க வேண்டும்

மேலும் பக்தர்களின் காலில் கல் குத்தாமல் இருக்க 12 சிவாலய சாலைகளில் தேங்காய் நார் விரிக்க வேண்டும்

12 கோயில்களில் உள்ள குளங்கள் ஆறு களில் புனித நீராடி சாமி தரிசனம் செய்வார்கள் இந்த கோயிலை சார்ந்த பெரும்பாலும் குளங்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லை பராமரிப்பு இல்லாமல் இருக்கும் இந்த குளங்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும்

கழிவறை உட்பட சுகாதார வசதிகள் ஏற்படுத்த வேண்டும் அடிப்படை வசதிகளான குடிநீர் மின்சாரம் உட்பட வசதிகளை ஏற்படுத்த வேண்டும்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் மஹா சிவாலய ஓட்டத்திற்கு அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்

108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருவட்டாறு ஆதிகேசவ 22 அடி நீளம் கொண்ட ஆதிகேசவ பெருமாள் சிலைக்கு தங்க அங்கி அணிவிக்க 10 கோடி ரூபாய்
ஒதுக்கீடு செய்வதாக சட்டமன்றத்தில் அறிவித்தது பல ஆண்டுகள் தாண்டி இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்க வில்லை இதற்கு அரசு வாயை திறக்கவில்லை இதற்கு எந்த திட்டமும் இல்லை எந்த செயல்பாடும் இல்லை இதனால் மூலிகையிலான சாமி சிலை பாதிப்பு ஏற்படும் பக்தர்கள் நன்கொடை செய்வது மட்டுமே நடப்பதாகவும் அரசு கோயில் பணத்தை வேறு வேலைகளுக்கு பயன்படுத்தி வருவதாகவும் கோயில் வளர்ச்சிக்கு செலவு செய்வதில்லை என்று குற்றச்சாட்டு எழுப்பி உள்ளார்

Exit mobile version