திருவள்ளூரில் திமுக சார்பில் பாக ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நியமிக்கப்பட்டுள்ள பாக ஒருங்கிணைப்பாளர்கள் ஒன்றிய, நகர, பேரூர் திமுக செயலாளர்களோடு இணைந் பணிகளை ஆற்றிட ஏதுவாக எடுக்கப்படவேண்டிய முன்னெடுப்புகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கலந்து கொண்டு பாக ஒருங்கிணைப்பாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைத்தார். பின்னர் பேசிய அவர், 2026 ல் நடைபெறவிருக்கும் தேர்தல் மிக முக்கியமானதாக உள்ளதாகவும், இது தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவுக்கான தேர்தலாக இருப்பதாகவும். இந்தியாவை மீட்க போகிறோம் என்று சொல்லிக் கொண்டிருந்த கெஜ்ரிவால் உள்பட ஆம் ஆத்மி கட்சியை மத்திய அரசு முடித்து விட்டதாகவும். கையில் அதிகாரம் இல்லாத அரசியல் கட்சிகள் மோடியை எதிர்க்க பயந்து கொண்டு இருந்த நிலையில் மோடியை எதிர்த்து தமிழ்நாட்டிற்கு மோடி எப்போதுமே அவுட் ஆப் கண்ட்ரோல் என பேசியவர் நமது முதல்வர் எனவும், திமுகவை ஏன் வீழ்த்த முடியவில்லை என்றால் அண்ணா உள்ளிட்ட தத்துவ தலைவர்கள் இருந்த காரணத்தினால் கட்சியை வீழ்த்த முடியவில்லை. அந்த தத்துவத்தையே வீழ்த்த முயற்சிக்கிறார்கள். இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என அவர் பேசினார்.
