மகிமை ஆற்றில் கவிந்த சொகுசு கார் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை தண்ணீரில் மிதக்கும் சொகுசு கார் அதிர்ச்சியுடன் பார்த்து செல்லும் மக்கள்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அனந்தமங்கலம் மகிமலை ஆறு பகுதி முக்கிய பிரதான சாலையாக உள்ளது அந்த சாலையில் திருப்பத்தில் சாலைகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது தற்பொழுது கனமழை காரணமாக வாகனங்கள் ஆபத்தான நிலையில் சென்று வருகின்றன இந்நிலையில் நேற்று இரவு அந்த வழியாக திருக்கடையூரில் இருந்து பொறையார் நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்று சாலையிலிருந்து நிலை தடுமாறி மகிமை ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது மகிமலையாற்றில் முழுவதும் தண்ணீர் செல்வதால் தண்ணீரில் சொகுசு கார் முழுவதுமாக கவிழ்ந்து மிதந்து வருகிறது காரில் பயணம் செய்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர் அவர்களை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு காப்பாற்றி உள்ளனர் இந்நிலையில் தண்ணீரில் விலை உயர்ந்த சொகுசு கார் கவிழ்ந்து மிதப்பதை அதிர்ச்சியுடன் மக்கள் பார்த்து செல்கின்றனர் பொறையார் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திட்டச்சேரி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் சிதம்பரத்திலிருந்து தங்களது சொந்த ஊர் திட்டச்சேரிக்கு சென்ற போது நடந்த விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் காரில் வந்த நிலையில் கார் கவிழ்ந்து விபத்து அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இருப்பினும் விலை உயர்ந்த சொகுசு கார் ஆற்றில் கவிழ்ந்து மிதப்பது ஐயோ போச்சே என அதிர்ச்சியுடன் பார்த்து செல்லும் மக்கள்.














