சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப் படுவதாகவும் லாட்டரி சீட்டுகளை வாங்கும் கூலித் தொழிலாளர்கள் பரிசு கிடைக்காமல் பணத்தை இழந்து வருவதோடு சில நேரங்களில் பரிசு விழுந்த வாடிக்கையாளர்கள் பணத்தையும் பெற முடியாமல் போலீசுக்கும் போக முடியாமல் ஏமாந்து வருவதும் வாடிக்கையாகக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் போலீசார் ஆத்தூர் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது காந்தி நகர் தண்ணீர் டேங்க் பகுதியில் தங்கம் 50 என்கிற லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த ஜோதி நகர் சரவணன், முபாரக் ஆகிய இருவரையும் கைது செய்தனர், இவர்கள் மீது ஏற்கனவே லாட்டரி சீட்டு விற்பனை,,விபச்சாரம், கள்ளச்சந்தையில் மது விற்பனை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது,















