திருவாரூர் திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோவிலில் சனிபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி அடைந்தார்.
தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.திறளான பக்தர்கள் பங்கேற்றனர்
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே திருக்கொள்ளிக்காடு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பஞ்சினும் மெல்லடியால் உடனுறை அக்கினேஸ்வர ஸ்வாமி பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு சனி பெயர்ச்சி விழா சிறப்பாக கொண்டாடப்படும்.
நளச்சக்கரவர்த்தி திருநள்ளாறில் உள்ள சனீஸ்வரரை வழிபட்ட பின்னர் திருக்கொள்ளிக்காடு வந்து அக்னி தீர்த்தத்தில் நீராடி பொங்கு சனீஸ்வரர் வழிபட்ட பின்னர் தான், இழந்த நாடு நகரங்களை திரும்பக் கிடைக்கப் பெற்றார் என்பது ஐதீகம்.
இக்கோவிலில் ஈசன், மகாலட்சுமி அம்பாளுடன், கையில் கலப்பையும், காகமும் கொண்டு அபயம் அளித்து காக்கும் பொங்கு சனீஸ்வரனாக அருள்பாலித்து வருகிறார்.
இங்குள்ள பொங்குசனீஸ்வரர் கையில் ஏர் கலப்பையுடன் அருள்பாலித்து வருவது தனிச்சிறப்பு மிக்கது .
இவ்வாலயத்தில் உள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி பொங்கு சனீஸ்வரர் வழிபட்டால் சனி தோஷத்தில் இருந்து விடுபட முடியும் என்பது ஐதீகம்.
இங்குள்ள ஈசனை வணங்கினால், நவக்கிரங்களின் தாக்கம் மறைந்தும், குறைந்தும் நன்மை உண்டாகும் என்பதால் பல்வேறுப் பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இக்கோவிலில் சனிப் பெயர்ச்சி இன்று காலை 8:24 மணிக்கு நடைபெற்றது.
முன்னதாக பால் , சந்தனம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.இதனையடுத்து சனீஸ்வர பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி அடைந்தார்.
பெ அதனைத்தொடர்ந்து சுவாமிக்கும், பொங்கு சனீஸ்வரருக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்த விழாவில் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
சனி பெயர்ச்சி விழா முன்னிட்டு பொதுமக்கள் வந்து செல்வதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பேருந்து வசதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருனீ கருட் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு வசதிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
