மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் இந்து புரட்சி முன்னணி சார்பில் விநாயகர் சிலை விஸர்ஜனம்; பல்வேறு மாநிலங்களில் அரசின் ஆதரவுடனும், அரசு விழாவாகவும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில், தமிழகத்தில் முதலமைச்சர் வாழ்த்து கூட சொல்ல மறுப்பதற்கு மாநிலத் தலைவர் கண்டனம்:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கூரைநாட்டில் அமைந்துள்ள முனீஸ்வரர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து புரட்சி முன்னணி சார்பில் “மயிலை எழுச்சி விநாயகர்” சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டு அதன் விஸர்ஜனம் இன்று மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக இந்து புரட்சி முன்னணியின் மாநிலத் தலைவர் பழ.சந்தோஷ்குமார் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினார் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் விநாயகர் சதுர்த்திக்கு மாநில அரசுகள் பல்வேறு வகைகளில் உதவி செய்வதுடன், அரசு விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விநாயகர் சதுர்த்திக்கு ஒரு வாழ்த்து கூட தெரிவிப்பதில்லை என குற்றம் சாட்டினார்.
