தீபாவளி.. கால்நடைகளின் மவுசு அதிகரிப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வாரச் சந்தையில் தீபாவளி திருநாளுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதையடுத்து விற்பனைக்காக ஏராளமான கோழி, ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் வட்டாரத்தில் தான் அதிகளவு கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. பெத்தானேந்தல், அல்லிநகரம், கீழடி, கொந்தகை, பழையனு£ர் உள்ளிட்ட பகுதிகளில் கறவை மாடு, வெள்ளாடு, செம்மறி ஆடு, கோழி உள்ளிட்டவைகள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன.

திருப்புவனம் வட்டாரத்தில் 28 ஆயிரம் வெள்ளாடுகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. திருப்புவனத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை காலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை கால்நடை சந்தை நடைபெறும், மதுரை, தேனி, திண்டுக்கல், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் ஆடு, கோழிகள் வாங்க வருவார்கள், இதுதவிர விவசாயிகள் வீடுகளில் வளர்ப்பதற்காகவும் முகூர்த்த நாட்களில் விருந்திற்கு அசைவம் சமைப்பதற்காகவும் ஆடு, கோழி வாங்க வருகை தருவார்கள், வரும் திங்கள் கிழமை தீபாவளி திருநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆடு, கோழிகள் வாங்க ஏராளமான வியாபாரிகள், பொதுமக்கள் வருகை தந்திருந்தனர்..

வாரச்சந்தை நடைபெறும் இடத்தில் ஆடு, கோழிகளை ஏற்றி செல்ல சரக்கு வாகனங்களும் அணிவகுத்து நின்றன. கடந்த சந்தையில் 10 கிலோ எடை கொண்ட ஆடு 9 ஆயிரம் ரூபாயில் இருந்து 11 ஆயிரம் ரூபாய் என விற்பனையான நிலையில் இந்த வாரம் 12000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. தீபாவளி திருநாளுக்காக புதிய உடை , பொருட்கள் வாங்குவதற்காக விவசாயிகள் பலரும் ஏராளமான ஆடுகளை கொண்டு வந்திருந்தனர். வியாபாரிகள் ஆடுகளை மொத்தமாக வாங்கி சரக்கு வேன்களில் ஏற்றி சென்றனர். ஒன்றரை கிலோ எடை கொண்ட நாட்டுகோழி 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. செம்மறியாடுகள் விலை வழக்கம் போல ஆறாயிரம், ஏழாயிரம் என விற்பனை செய்யப்பட்டது. தீபாவளி சந்தை என்பதால் ஆடு, கோழிகளின் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது

Exit mobile version